நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஃபிரெண்ட்ஸ் படத்தில் சிறு வயது விஜய்யாக கலக்கியவர் பரத். பிரெண்ட்ஸ் மட்டுமல்லாமல், வானத்தைப் போல உள்ளிட்ட சில படங்களில் பரத் நடித்திருக்கிறார்.90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலான சக்க லக்க பூம் பூம் உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களிலும் பரத் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் பின்னாட்களில் திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயினாக களமிறங்குவது வழக்கம். மற்றும் சிலர் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகி வேறு துறைகளில் கவனம் செலுத்துவர்.
அப்படி பரத் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவர் நடித்த படங்களை பார்த்தபோது நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அதற்கான விடை கிடைத்திருக்கிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு பரத் பேட்டியளித்திருக்கிறார். அதில் விளம்பர நிறுவனத்தில் 4 வருடங்கள் பணிபுரிந்தததாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக வேலை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அந்த பேட்டியில் பரத் தெரிவித்திருப்பதாவது, எனக்கு சிறுவயதிலிருந்து ஐஸ்கிரீம்கள் பிடிக்கும் ஆனால் சென்னையில் எங்கும் ஐஸ்கிரீம் டிரக்குகள் இல்லை. நாம் ஏன் மக்களிடம் தேடி சென்று ஐஸ்கிரீம் விற்கக் கூடாது. என்ற கேள்வி எழுந்தது. என் நண்பனுடன் இதுதொடர்பாக விவாதித்தபோது அவரும் ஆர்வம் காட்டவே இந்தத் தொழிலில் இறங்கினோம். தற்போது சென்னையின் முதல் ஐஸ்கிரீம் டிரக்கை நடத்திக்கொண்டிருக்கிறோம் .
வாடிக்கையாளர்கள் பலரும் என்னை அடையாளம் கொண்டு நலம் விசாரிக்கின்றனர். என்று குறிப்பிட்டுள்ளார்.இதனால் எனக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தமில்லை. நான் அதற்காக முழு வீச்சில் முயற்சிக்கவில்லை. என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.