• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'பள்ளத்தாக்கில் மனச்சோர்வின் எதிரொலி’ - நான்காம் திருமணநாளில் சமந்தா பதிவு!

'பள்ளத்தாக்கில் மனச்சோர்வின் எதிரொலி’ - நான்காம் திருமணநாளில் சமந்தா பதிவு!

சமந்தா

சமந்தா

இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  • Share this:
    தனது நான்காம் ஆண்டு திருமணநாளில் நடிகை சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது. கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.



     




    View this post on Instagram





     

    A post shared by Samantha (@samantharuthprabhuoffl)






    இது ஒருபுறமிருக்க, சமந்தாவும், நாக சைத்தன்யாவும் திருமணம் செய்து இன்றோடு நான்காண்டுகளாகிறது. ஆனால் இந்த திருமணநாளில் அவர்கள் ஒன்றாக இல்லை. இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனது படத்தைப் பதிவிட்டு, ”பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து மீட்டெடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவொரு ஃபேஷன் ஷோ-வுக்காக போடப்பட்ட போஸ்ட்.



     




    View this post on Instagram





     

    A post shared by Samantha (@samantharuthprabhuoffl)






    கடந்த வருடம் இதே நாளில், ”நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என நாக சைத்தன்யாவுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: