தமிழை இனி யார் காப்பான்..? சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்

தமிழை இனி யார் காப்பான்..? சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2019, 1:01 PM IST
  • Share this:
சூர்யா ரசிகர்களின் மன்னிப்பு கடிதத்தை வாசித்து பார்த்த காவல் ஆய்வாளர் இவர்களின் தமிழால் துக்கம் தொண்டையை அடைத்து விட்டது என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது.

படத்தை வரவேற்கும் விதமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூர்யா ரசிகர்கள் சிலர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளனர்.


புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் இவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார். கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களிடம் இதுபோன்று முன்அனுமதி பெறாமல் ஊர்வலம் செல்வது, பேனர் வைப்பது போன்றவை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதன்பின் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என கடிதம் எழுதி கொடுக்கச் சொல்லி உள்ளார்.

கடிதம் எழுதிய ஆறு மாணவர்களும் தப்பு தப்பாக தமிழை எழுதி உள்ளனர். அதனை ஆய்வாளர் தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். அதில், ’மனசைத் திடப்படுத்திக்கிட்டுத்தான் அதைப் படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது. இந்த கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும் ...?" என்றார்.

அந்த கடிதத்தில் ஒரு மாணவர் ஆய்வாளர் என்பதற்கு ஆவ்யாளர்னு எழுதி உள்ளார். மற்றொருவர் விலாசம் என்பதற்கு விளாசம் என்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading