• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூப்பர் டூப்பர் நடிகை - நயன்தாராவுக்கு போர்ப்ஸ் இந்தியா புகழாரம்!

சூப்பர் டூப்பர் நடிகை - நயன்தாராவுக்கு போர்ப்ஸ் இந்தியா புகழாரம்!

நயன்தாரா

நயன்தாரா

பிரபல போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் நயன்தாராவின் புகைப்படத்தை அட்டைப் படமாகப் போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என புகழ்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் இந்தியா தனது அட்டைப் படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை படத்தின் மூலம் 2003 இல் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. டயானா மரியம் குரியன் என்ற அவரது பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினர். மலையாளத்தில்  மோகனலாலுடன் விஸ்மயதம்பத்து, நாட்டு ராஜாவு படங்களிலும், மம்முட்டியுடன் தஸ்கர வீரன், ராப்பகல் படங்களிலும் நடித்தார். 2005 இல் ஐயா படத்தின் மூலம் ஹரியால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதே வருடம் ரஜினி ஜோடியாக சந்திரமுகியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மலையாளத்தில் நடிக்கும்வரை நயன்தாரா மற்றுமொரு நடிகையாகவே இருந்தார். ஐயா, சந்திரமுகிக்குப் பிறகு அவரது ஸ்டார் வேல்யூ ஏறியது. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு போரடித்து திரையுலகினரும் அவரை தவிர்க்க தொடங்கிய போது, பில்லா படத்தில் உடல் இளைத்து புது லுக்குடன் திரும்பி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நயன்தாராவே தமிழின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அவரது படங்கள் வந்து கொண்டிருக்கின்றன

சிம்பு, பிரபுதேவாவுடனான நயன்தாராவின் காதலும், பிரிவும் அவரது கரியரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. நானும் ரௌடிதான் படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாராவின் ஸ்டார் அந்தஸ்துக்கு இவை எதுவும் குறுக்காக இல்லை

Also read... விரைவில் காதலனை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத்சிங்...!

இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் நயன்தாராவின் புகைப்படத்தை அட்டைப் படமாகப் போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என புகழ்ந்துள்ளது. நயன்தாரா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



நயன்தாரா நடித்திருக்கும் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாக உள்ளது. அத்துடன் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார். யுவராஜ் தயாளனின் புதிய படம், மலையாளத்தில் தயாராகும் கோல்ட், தெலுங்கில் தயாராகும் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: