பத்தாவது மல்டிபிளக்ஸை திறந்த ஐநாக்ஸ்

ஐநாக்ஸ்

பெங்களூருவில் உள்ள ஐநாக்ஸ் திரைகளின் எண்ணிக்கை மட்டும் 44 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
ஒருபுறம் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக திரையரங்கு தொழில் முடங்கியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்த்து மற்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கு பக்கம் வருவதில்லை. மகாராஷ்டிராவில் திரையரங்குகள் கொரோனா அதிகரிப்பால் மூடிக்கிடக்கின்றன. தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நெருக்கடிகள் காரணமாக, இருக்கிற திரையரங்குகளை கல்யாண மண்டபமாக்கலாமா, வணிகவளாகமாக மாற்றலாமா இல்லை குடோனாக பயன்படுத்தலாமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் யோசித்து வருகின்றனர். ஓடிடி யின் ஆதிக்கத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இந்த நெருக்கடிகள் எல்லாம் ஒன்றிரண்டு திரையரங்குகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான். ஐநாக்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெங்களூருவில் ஐநாக்ஸுக்கு சொந்தமாக ஒன்பது மல்டிபிளக்ஸ்கள் உள்ளன. இந்த கொரோனா காலகட்டத்தில் பத்தாவதாக ஒன்றை திறந்திருக்கிறார்கள்.

மொத்தம் ஐந்து திரைகள் இந்த புதிய மல்டிபிளக்ஸில் உள்ளன. இத்துடன் சேர்த்து பெங்களூருவில் உள்ள ஐநாக்ஸ் திரைகளின் எண்ணிக்கை மட்டும் 44 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள சத்யம் குழுமத்தின் திரையரங்குகளை வாங்கிய பின் ஐநாக்ஸின் மல்டிபிளக்ஸ்களின் எண்ணிக்கை பத்தை தாண்டியது. இதற்கு மேலும் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிய மல்டிபிளக்ஸை திறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்களின் மல்டிபிளக்ஸுக்கு மட்டும் எப்படியே ரசிகர்கள் நிரம்பிவிடுகிறார்கள்.
Published by:Sheik Hanifah
First published: