ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜாஸ் சினிமாஸ் திரையரங்கை வாங்கியது ஐநாக்ஸ்

ஜாஸ் சினிமாஸ் திரையரங்கை வாங்கியது ஐநாக்ஸ்

ஐநாக்ஸ்

ஐநாக்ஸ்

ஜாஸ் சினிமாஸ் திரையரங்கை ஐநாக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையின் பிரபல திரையரங்கமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை ஐநாக்ஸ் வாங்கியது.

சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக மாலில் ஜாஸ் சினிமாஸ் இயங்கி வருகிறது. ஒரு Imax மற்றும் 10 சாதாரண திரை என மொத்தம் 11 திரையரங்குகளுடன் Jazz சினிமாஸ் திரையரங்கம் இயங்கி வருகிறது. மேலும் சென்னையின் முக்கிய திரையரங்கமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அந்த Jazz சினிமா திரையரங்கை ஐநாக்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ளது.

கவுதம் கார்த்தியுடன் விரைவில் திருமணம்.... இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டெலிட் செய்த மஞ்சிமா மோகன்

இதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்து பெயர் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் விரைவில் Jazz திரையங்கம் ஐநாக்ஸ் வசம் வந்துவிடும்.

சென்னையில் சிட்டி சென்டர், விருகம்பாக்கம் சந்திரா மால் மற்றும் மெரினா மால் ஆகிய இடங்களில் ஐநாக்ஸ் இயங்கி வருகிறது.

அழகின அழகி அஸ்காவா.. நடிகை ஸ்ரேயாவின் அசத்தல் இன்ஸ்டா புகைப்படங்கள்..

இது தவிர சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் ஐநாக்ஸ் திரையரங்கம் செயல்படுகிறது.  இந்த நிலையில் மேலும் ஒரு யூனிட்டை ஐநாக்ஸ் நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: Theatre