ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

10 மொழிகளில் உருவாகிறது புஷ்பா 2 படம்?

10 மொழிகளில் உருவாகிறது புஷ்பா 2 படம்?

புஷ்பா 2

புஷ்பா 2

புஷ்பா 2 படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டி பகத் பாசில் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார். முதல் பாகம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புஷ்பா 2 படம் 10 மொழிகளில் உருவாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுனின்  நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின்  முதல் பாகம் மெகா ஹிட்டானது.  இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

முதல் பாகத்தின்போதே அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகமாக புஷ்பாதி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

முதல் பாகம் மெகா ஹிட் ஆனதால் அடுத்த பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ப திரைக்கதையை இயக்குனர் சுகுமார் வடிவமைத்து வருகிறார்.

முதல் பாகத்தில் புஷ்பா எப்படி உருவாகி, செம்மரக் கடத்தல் தொழிலில் டான் ஆகிறான் என்பதை விவரித்தது. 2ம் பாகம் வெளிநாடுகளிலும் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி அமைகிறது என்பதை விவரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read... கருப்பு நிற உடையில் படு மாடர்னாக போஸ் கொடுத்த நடிகை அனன்யா பாண்டே

புஷ்பா 2 படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டி பகத் பாசில் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார். முதல் பாகம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது. இரண்டாம் பாகத்தை இன்னும் கூடுதலாக 10 சர்வதேச மொழிகளில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Allu arjun, Entertainment