முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்... வாடிவாசல் படம் குறித்து வைரலாகும் தகவல்!

சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்... வாடிவாசல் படம் குறித்து வைரலாகும் தகவல்!

சூர்யா - வெற்றிமாறன்

சூர்யா - வெற்றிமாறன்

சூர்யா- வெற்றிமாறன் கூட்டணி இணையும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது .

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் சில ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. இருப்பினும், இருவரின் முந்தைய கமிட்மென்ட் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையே சுதா கொங்கராவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை சூர்யா விரைவில் தொடங்கவுள்ளதால், 'வாடிவாசல்' படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என செய்திகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. ஆனால் தற்போது மார்ச் மாதத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ள வெற்றிமாறன் முடிவெடுத்துள்ளாராம்.

அந்த இரண்டு மாத இடைவெளியில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director vetrimaran