முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சல்மான்கான் படத்தில் நடிக்கும் 4 முன்னணி நடிகைகள்

சல்மான்கான் படத்தில் நடிக்கும் 4 முன்னணி நடிகைகள்

நடிகர் சல்மான்கான்

நடிகர் சல்மான்கான்

நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் சல்மான்கானிற்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் நோ என்ட்ரி பாகம் 2 படத்தில் 4 முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2005-ம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான 'நோ என்ட்ரி' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் பிளேபாய் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடித்திருந்தார். தமிழில் 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'சார்லி சாப்ளின்' படத்தின் ரீமேக்தான் இந்த 'நோ என்ட்ரி.'

தமிழில் பிரபுதேவா நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கானும், பிரபு நடித்த கதாபாத்திரத்தில் அனில்கபூரும் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றது இந்தப் படம்.

இந்நிலையில் தற்போது நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் சல்மான்கானிற்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிற படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தமன்னா மற்றும் ராஷ்மிகாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருவரும் சல்மான்கானுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read... கமலா, ரஜினியா யார் காமெடி நடிப்பில் சிறந்தவர்? - சூடுபிடிக்கும் விவாதம்

அவர்களை தவிர நடிகை பூஜா ஹெக்டேவை ஒரு பாட்டுக்கு நடம் ஆடவைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் சமந்தா, தமன்னா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய முன்னணி நடிகைகள் ஒரே படத்தில் இணைய உள்ளதாக தெரிகின்றது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actress Rashmika Mandanna, Actress Samantha, Pooja Hegde, Salman khan, Tamannaah bhatia