ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உதயநிதியின் மாமன்னன் படம் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

உதயநிதியின் மாமன்னன் படம் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

மாமன்னன்

மாமன்னன்

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களைப் போல இந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு முக்கிய விஷயத்தை பேச உள்ளது என கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Also read... 59 வருட நிறைவை கொண்டாடும் எம்ஜிஆரின் பரிசு படம்!

முன்னதாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் வரும் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். அதேபோல் பிரபலம் ஆரவ், இப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக மாமன்னன் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கவில்லி என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Udhayanidhi Stalin