பிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்!

விஜயின் பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்!
பிகில்
  • News18
  • Last Updated: September 20, 2019, 1:05 PM IST
  • Share this:
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Also read... எப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்? ட்விட்டர் விமர்சனம்

வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் நேற்று படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விஜயின் பேச்சு, நிகழ்ச்சியில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.அதனை தொடர்ந்து பிகில் பட டீசர் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also see...

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading