பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்...!

பா.இரஞ்சித்

விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தை முடித்துள்ளார். கௌதம் இயக்கத்தில் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் முடிந்த பிறகு, விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக தகவல் கசிந்துள்ளது. 

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் கவனம் ஈர்த்த இரஞ்சித் கபாலி, காலா என ரஜினியை வைத்து தொடர்ந்து இரு படங்கள் எடுத்தார். அதில் கபாலி பெயர் வாங்கித் தந்தது. காலா ரஜினி ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சற்று மங்கிப்போன தனது பெயரை சார்பட்டா பரம்பரை படத்தில் மீண்டும் துடைத்து மெருகேற்றினார் இரஞ்சித். அடுத்து, காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்து வருகிறார். இதுவொரு காதல் கதை.

Also read... பிரபுதேவாவின் புதிய படத்தில் நடிக்கும் இரு முன்னணி ஹீரோக்கள்!

இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக தகவல் கசிந்துள்ளது. விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தை முடித்துள்ளார். கௌதம் இயக்கத்தில் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில், அவர் அடுத்து இரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல். அக்டோபரில் இவர்கள் இணையும் படம் தொடங்கப்படலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: