முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வெளியாகும் ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ?

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வெளியாகும் ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ?

ஜெயிலர்

ஜெயிலர்

அனிருத் இசையமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாத்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து படம் பண்ணுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படம் சறுக்கியதால்  ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர் நெல்சன், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யா ராயை  படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதேபோன்று டாக்டர், எதற்கும் துணிந்தவன் வெற்றிப் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் இடம் பெறுகிறார். அனிருத் இசையமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read... அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை ரீமேக் செய்யக் கூடாது ஏன்?

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இயக்குநர் நெல்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு டெஸ்ட் சூட் நடத்தியதாகவும் அதில் ரஜினி உட்பட படத்தின் முக்கிய நடிகர்கள் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Nelson dilipkumar, Rajinikanth