ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ரிலீஸ் தேதி குழப்பம்.. ஜனவரி 11ம் தேதியை பிளான் செய்யும் ரெட் ஜெயண்ட்..?! குழப்பத்தில் ரசிகர்கள்

துணிவு ரிலீஸ் தேதி குழப்பம்.. ஜனவரி 11ம் தேதியை பிளான் செய்யும் ரெட் ஜெயண்ட்..?! குழப்பத்தில் ரசிகர்கள்

அஜித்

அஜித்

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை ஜனவரி 11ம் தேதி வெளியிட ரெட் ஜெயன்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பொங்கள் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும்,ஜிப்ரான் இசையில் இப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் சிபி, பாவனி, அமீர், பக்ஸ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக துணிவு படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே இயக்குனர் வினோத் தெரிவித்திருந்தார். அதன்படி, ட்ரெய்லரில் சில ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இடம்பெற்றிருந்தது. மேலும் ட்ரெய்லரில் அஜித் ஆடும் காட்சி ரசிகர்களுக்கு அதிக அளவிள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தாலும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 11-ம் தேதி படத்தை வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also read... பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்... ஜெயிக்கப்போவது யார்? வெளியானது வீடியோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Thunivu