முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாடிவாசலை தள்ளி வைத்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

வாடிவாசலை தள்ளி வைத்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

சூர்யா

சூர்யா

சிவா தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தைப் படத்தை இயக்கியே அறிமுகமானார். அப்போதே அவருக்கு சிவகுமார் குடும்பத்துடன் நெருக்கம் உண்டு.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார், அதற்காக ஒரு மாத காலம் ஜல்லிக்கட்டு பயற்சி எடுக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில், வாடிவாசல் படத்தை தள்ளி வைத்து சிவா படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. 

இரண்டு படங்களுக்கு நடுவில் கணிசமான இடைவெளி விடுகிறவர் வெற்றிமாறன். அசுரன் படத்தை முடித்ததும், விடுதலை படத்தை தொடங்கியதுதான், சினிமா வாழ்வில் அவர் அதிக இடைவெளி இல்லாமல் தொடங்கிய படமாகும். அப்படம் முடிவடையும் முன்பே வாடிவாசல் குறித்து பேச ஆரம்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசுரன், விடுதலைப் போல திரைக்கதையில் மட்டும் சிக்கலை கொண்ட கதையல்ல வாடிவாசல். மேக்கிங்கில் அதிக கவனத்தை கோரும் படைப்பு அது. சூர்யா அடுத்து வாடிவாசலில் நடிப்பாரா இல்லை சிவா இயக்கத்தில் நடிப்பாரா என்ற ஊசலாட்டத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து சூர்யா சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என உள்வட்ட தகவல்கள் உறுதியாக கூறுகின்றன.

Also read... இந்த வாரம் திரையரங்கு, ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒரு பார்வை!

சிவா தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தைப் படத்தை இயக்கியே அறிமுகமானார். அப்போதே அவருக்கு சிவகுமார் குடும்பத்துடன் நெருக்கம் உண்டு. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார். அண்ணாத்த பட வேலைகள் முடிந்த நிலையில், சூர்யா படத்துக்கான அரங்கு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சிவா படத்தை முடித்த பின் அடுத்த வருடமே வெற்றிமாறனின் வாடிவாசலில் சூர்யா நடிக்கிசூர்

ஆக, சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்குவது சிவா என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

First published:

Tags: Actor Suriya