ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன் - விக்கி குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் செய்தி

நயன் - விக்கி குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் செய்தி

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறார் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறார் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

  பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

  இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

  இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  Also read... என்ன எகிரிட்டு வரீங்க... நடிக்காதீங்க... ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமி - வெளியானது கலேபர ப்ரோமோ!

  தொடர்ந்து, விக்னேஷ் சிவன்-நயன்தாராவிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை கோப்புகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நயன்தாராவின் அண்ணன் துபாயில் இருக்கிறார். இதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Director vignesh shivan, Nayanthara