Home /News /entertainment /

தளபதி 67 படத்தின் தலைப்பு இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

தளபதி 67 படத்தின் தலைப்பு இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

படம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில், இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • Last Updated :
    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் தலைப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது திரைப்படம் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகின்றது. சமீபத்தில் வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் போஸ்ட்டர்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

    கைதியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கொரோனா லாக்டவுனிற்கு பிறகு வெளியான முதல் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். மற்ற படங்களை லோகேஷ் கனகராஜ் முழுவதுமாக அவரது ஸ்டைலில் எடுத்திருப்பார்.

    Also read... உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்!

    இந்நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் பிரபல படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் விக்கிபீடியா பக்கத்தில் அவர் அடுத்து தளபதி 67 பணியாற்ற உள்ளதாகவும் அப்படத்தின் டைட்டில் 'நான் வாழும் உலகம்' எனவும் உள்ளது.



    படம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில், இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி