ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா - பாலா படத்தின் பெயர் இதுவா? கோலிவுட்டில் வைரலாகும் தகவல்

சூர்யா - பாலா படத்தின் பெயர் இதுவா? கோலிவுட்டில் வைரலாகும் தகவல்

சூர்யா 41

சூர்யா 41

‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயகுநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். சுமார் நாற்பது தினங்களுக்கு இந்த ஷெட்யூல்டை திட்டமிடப்பட்டுள்ளனர். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதிலொன்று காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரம் என ஒரு வதந்தி சுற்றி வருகிறது.

மேலும், சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாத்தில் பரவி வருகிறது. இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also read... கதாநாயகனாக... குணச்சித்திர நடிகராக... வில்லனாக... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் எஸ்.ஜே.சூர்யா!

இந்நிலையில் சமீபத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், பிரச்னை தீவிரமாகும் பட்சத்தில் படம் நிறுத்தப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இந்த வதந்திகளுக்கு சில நாட்களுக்கு முன் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் சூர்யா. சூர்யா 41 படத்தின் செட்டில் இயக்குனர் பாலாவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்த அவர், “மீண்டும் படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director bala