Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெயிலர் படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்!

ஜெயிலர் படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்!

ரஜினிகாந்த் - நெல்சன்

ரஜினிகாந்த் - நெல்சன்

ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை  பெறாத நிலையில் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also read... எப்படி இருக்கிறது விஜய் சேதுபதியின் மாமனிதன்? ட்விட்டர் விமர்சனம்!

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை அடுத்த 2023 ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajini Kanth