ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள மாஸ் படங்கள் மற்றும் சீரீஸ்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் ஜூன் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான ஜன கண மன உள்ளிட்ட திரைப்படம் மற்றும் சில சீரீஸ்கள் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
டான்:
அட்லி உதவி இயக்குனரான சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள டான் திரைப்படம் இந்த மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்நிலையில் வரும் ஜூன் 10-ம் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாகிறது.
ஜன கண மன:
மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ஜன கண மன திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நெட்ஃபிளிக்சில் ஜூன் 2 வெளியாக உள்ளது. குயின்ஸ் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா துருவன், ஷாரி, ஷம்மி திலகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைதான்:
இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கிய திரைப்படம் மைதான். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 3ந் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஹசில் (Hustle):
கூடைப்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹசில் (Hustle) திரைப்படம் நெட்ஃபிளிக்சில் வரும் ஜூன் 8ம் தேதி வெளியாக உள்ளது. ஜெரிமியா ஜாகர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்த திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லர், குயின் லதிஃபா, பென் ஃபோஸ்டர், ராபர்ட் டுவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
போர்கன்:
அரசியலை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளில் ஆகச் சிறந்தது என, 2010இல் டென்மார்க்கில் வெளியான இந்தத் தொடர் கருதப்படுகிறது. மூன்று சீசன்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்சில் நான்காவது சீசன் வெளியாக உள்ளதால், போர்கனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Also read... திரைப்படத்தில் இடம்பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இடிக்கப்பட்ட சிலை
பீக்கி பிளைண்டர்ஸ் சீசன் 6
அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் குற்ற நாடகத்தின் பீக்கி பிளைண்டர்ஸ் சீசன் 6 ஜூன் 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஸ்டீவ் நைட் உருவாக்கியுள்ள இந்தத் தொடரில் சிலியன் மர்பி, ஹெலன் மெக்ரோரி, பால் ஆண்டர்சன், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amazon, Hotstar, Netflix, OTT Release