முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயிலர் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்

ஜெயிலர் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்

ரஜினிகாந்த் - நெல்சன்

ரஜினிகாந்த் - நெல்சன்

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை  பெறாத நிலையில் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யாராயை  படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது ஜெயிலர் படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார் என்றும் அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also read... வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதாவது அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nelson dilipkumar, Rajini Kanth