இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் இதுதானா? வெளியானது தகவல்!

முதல் முறையாக இந்த படம் மூலம் தான் கமல் ஹாசன்- விவேக் கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் இதுதானா? வெளியானது தகவல்!
விவேக் - நடிகர்
  • News18
  • Last Updated: September 28, 2019, 2:44 PM IST
  • Share this:
இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக்கின் கதாபாத்திரம் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


இந்தப் படத்தின் கதை கசிந்துவிட்டதாக ஏற்கெனவே சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also see... இணையத்தில் வைரலாகும் ஆன்ட்ரியாவின் ஹாட் போட்டோஸ்!

இந்நிலையில் விவேக் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.அந்த கதாபாத்திரம் இதுவரை பார்க்காத விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல் முறையாக இந்த படம் மூலம் தான் கமல் ஹாசன்- விவேக் கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்