ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் நடிப்பு.. சிறந்த நடிகருக்கான விருதை விசித்திரன் படத்திற்காக பெற்ற ஆர்.கே.சுரேஷ்!

சூப்பர் நடிப்பு.. சிறந்த நடிகருக்கான விருதை விசித்திரன் படத்திற்காக பெற்ற ஆர்.கே.சுரேஷ்!

விசித்திரன் படத்தின் போஸ்டர்

விசித்திரன் படத்தின் போஸ்டர்

2016 - இல் வெளியான சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆர்.கே. சுரேஷ் நடிகராக அறிமுகமானார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா - பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ஆர்கே சுரேஷ் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர் ஆர்.கே. சுரேஷ். 2016 - இல் வெளியான சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆர்.கே. சுரேஷ் நடிகராக அறிமுகமானார்.

  அதே ஆண்டில் வெளிவந்த மருது படத்தில் ரோலக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பின்னர் ஸ்கெட்ச், காளி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.

  'ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக் கூடாது..' நடிகை இந்துஜாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்

  மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படம் விசித்திரன் என்ற பெயரில் தமிழில் வெளியானது.

  ' isDesktop="true" id="820633" youtubeid="-QIxT5Cq2aI" category="cinema">

  இதில் மாயன் என்ற கேரக்டரில் ஆர்.கே சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் இந்தியா - பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விசித்திரன் படத்தில் நடித்ததற்காக ஆர்கே சுரேஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  விநியோகஸ்தர் என்ற முறையில் இந்த ஆண்டு மாமனிதன் மற்றும் லைகர் ஆகிய படங்களை ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டிருந்தார். இந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது விசித்திரன் படத்திற்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood