இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் கசிந்ததா?

இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் கசிந்ததா?
இந்தியன் 2
  • News18
  • Last Updated: September 19, 2019, 12:37 PM IST
  • Share this:
‘இந்தியன் 2’ படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


இந்தப் படத்தின் கதை கசிந்துவிட்டதாக ஏற்கெனவே சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சமூக ஆர்வலாரான சித்தார்த் தனது மனைவியுடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வயதான கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார். ஊழல் அரசியல்வாதிகளை தனது பாணியில் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.சென்னை திரும்பும் கமல்ஹாசன் தனது மனைவியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தார்த்திடம் வாங்குகிறார். பின்னர் வர்ம கலையின் மூலமாக அனைவரையும் அழிக்கிறார். இதற்கு நடிகர் சித்தார்த்தும், வர்மக் கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கின்றனர்.

இதுதான் இந்தியன் 2 படத்தின் கதை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக கிளைமாக்ஸ் குறித்த தகவல் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஊழலுக்கு எதிராக ஏழு கொலைகளைச் செய்யும் இந்தியன் தாத்தா, ஒருகட்டத்தில் தானாக போலீசில் சரண்டைந்து விடுகிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று இறுதியில் இந்தியன் தாத்தாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதாக கதை முடிவடைகிறது.

படத்தின் கதை மற்றும் கிளைமாக்ஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து படக்குழு வாய்திறக்கவில்லை.

வீடியோ பார்க்க: கோவிலில் பூஜை செய்யும் திருநங்கை

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்