ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமாவில் இன்னிங்ஸை தொடங்கும் தோனி… பெரிய பட்ஜெட் படங்கள் விரைவில் அறிவிப்பு…

சினிமாவில் இன்னிங்ஸை தொடங்கும் தோனி… பெரிய பட்ஜெட் படங்கள் விரைவில் அறிவிப்பு…

தோனி

தோனி

‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தே லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தோனி தயாரித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய அணியின் லெஜெண்டரி கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன் டிராபி ஆகிய 3 கோப்பைகளை, இந்திய அணிக்காக பெற்று தந்துள்ளார்.

  இந்த சாதனை கிரிக்கெட் உலகில் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த வீரரும் செய்யாத ஒன்றாகும். தோனி தற்போது அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்து வருகிறார்.

  விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக தோனி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தோனி ஆக்டிவாக இல்லாவிட்டாலும்கூட அவரை பின்தொடர்வோர், அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

  Nayanthara Vignesh Shivan: இதே மாதிரி ஃபாஸ்ட்டா AK62 ரிலீஸ் பண்ணுங்க... விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்த அஜித் ரசிகர்!

  கிரிக்கெட்டில் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

  இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதற்காக சினிமா உலகில் தோனி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளார்.

  முன்னணி நடிகராக இருந்த போதே பாடகருக்காக கௌரவ வேடத்தில் நடித்த கமல் - எந்த படம் தெரியுமா?

  அந்த வகையில், அவருடைய தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Dhoni