ஆஸ்கர் குழுவில் இந்திய சினிமா கலைஞர்கள்!

அதிரடியான மாற்றங்களுடன் பல புதிய உறுப்பினர்களுடன் களமிறங்குவதால் அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆஸ்கர் குழுவில் இந்திய சினிமா கலைஞர்கள்!
இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர் மற்றும் ஸ்ரீநிவாஸ் மோகன்.
  • News18
  • Last Updated: July 4, 2019, 12:07 PM IST
  • Share this:
உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர் ஆகியோருடன் 2.0, பாகுபலி படங்களின் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீநிவாஸ் மோகனும் இடம்பெற்றுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற விருது விழாக்களில் முதன்மையானது ஆஸ்கர் விருது விழா. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக அரங்கேறும் இந்த விழாவை காண உலகெங்கும் உள்ள திரை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.


அதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர் ஆகியோருடன் 2.0, பாகுபலி படங்களின் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீநிவாஸ் மோகனும் இடம்பெற்றுள்ளார்.

மேஜிக் மேஜிக் 3டி, சிவாஜி, எந்திரன், பாகுபலி ஆகிய படங்களுக்காக இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றுள்ள இவர் ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இத்தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த ஸ்ரீநிவாஸ் மோகன், ஆஸ்கர் குழுவில் இணைந்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.கடந்த ஆண்டு பாலிவுட்டைச் சேர்ந்த ஷாருக்கான், தபு, மாதுரி தீட்சித் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் இந்திய அளவில் இருந்து பாலிவுட் பிரபலங்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அனுபம் கேர், அர்ச்சி பஞ்சாபி ஆகியோர் நடிகர்களுக்கான தேர்வுக் குழுவிலும் ஜோயா அக்தர் இயக்குநர்களுக்கான தேர்வுக் குழுவிலும் அனுராஜ் காஷ்யப் குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் பிரிவிலும் ஸ்ரீநிவாஸ் மோகன் மற்றும் ஷெர்ரி பர்தா ஆகியோர் வி.எஃப்.எக்ஸ் பிரிவிலும் ரித்தேஷ் பத்ரா எழுத்தாளர்களுக்கான பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் பாடகியுமான லேடி காகா, ஸ்பைடர் மேன் புகழ் டாம் ஹாலண்ட் ஆகியோரும் இந்தமுறை தேர்வுக் குழுவில் புதிய வரவுகளாக இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டுக்கான தேர்வுக் குழுவில் 50 சதவிகிதம் பெண்கள் இடம்பெற்றிருப்பதாக ஆஸ்கர் அறிவித்துள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் ஆஸ்கர் விருதில் நிற வேறுபாடு இருப்பதாக தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஆண்டிற்கான தேர்வுக் குழுவில் 16 சதவிகிதம் வேற்று நிறத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படி பல அதிரடியான மாற்றங்களுடன் பல புதிய உறுப்பினர்களுடன் களமிறங்குவதால் அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரதா கபூரின் கியூட் போட்டோஸ்!
First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading