Maya: இளைஞர்களின் கவனம் ஈர்த்த மாயா - யார் தெரியுமா?

மாயா

மற்ற மாடல்களைப் போல் ஒல்லியாக இல்லாமல், உயரத்திற்கேற்ற உடல்வாகு என பார்ப்பதற்கு ஜைஜாண்டிக்காக இருக்கிறார்.

  • Share this:
    சில தினங்களாக மாயா என்பவரின் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

    தற்போது சினிமா நடிகைகளுக்கு சமமாக சீரியல் நடிகைகளும், மாடல்களும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்த இணைய யுகத்தில் சமூக வலைதளங்களின் உதவியால், ரசிகர்களுடன் அவர்களால் நேரடி தொடர்பில் இருக்க முடிகிறது. ஏற்கனவே அறியப்பட்ட ஒருவரை இன்னும் பிரபலமாக்கவும், வெளியில் தெரியாத திறமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதிலும் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மாயா என்பவர் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். யாரிவர் என யோசிக்கிறீர்களா? இவர் அடிப்படையில் ஒரு மாடல். மற்ற மாடல்களைப் போல் ஒல்லியாக இல்லாமல், உயரத்திற்கேற்ற உடல்வாகு என பார்ப்பதற்கு ஜைஜாண்டிக்காக இருக்கிறார். மாயாவிற்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்ததாம், ஆனால் அதில் ஆர்வம் இல்லாததால் மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டகிராமில் கொண்டுள்ள மாயா, அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுகிறார். அதில் பெரும்பாலும் கவர்ச்சியே அதிகம்.

    அவரின் படங்கள் தற்போது இணையவாசிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: