Home /News /entertainment /

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பங்கேற்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்…

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பங்கேற்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்…

தி லெஜண்ட் ஆடியோ, ட்ரெய்லர் ரிலீஸ் போஸ்டர்..

தி லெஜண்ட் ஆடியோ, ட்ரெய்லர் ரிலீஸ் போஸ்டர்..

பான் இந்தியா படமாக தி லெஜண்ட் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தி லெஜெண்ட் படத்தின் ஆடியோ ரிலீஸில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்பார்கள் என்ற கோலிவுட்டில் பரபரப்பு காணப்படுகிறது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணனின் நடிப்பில் தி லெஜண்ட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பல்வேறு விளம்பரப் படங்களை தயாரித்த ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். இவர்கள் கடைசியாக தமிழில் விசில் என்ற படத்தை இயக்கியிருந்தார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள 2 பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக ராய் லட்சுமியுடன், ஹீரோ சரவணன் போடும் குத்தாட்ட பாடலான வாடிவாசல், யூடியூபில் 13 மில்லியன்களை கடந்துள்ளது.

இதையும் படிங்க - ஐ.பி.எல். இறுதிப் போட்டியின்போது வெளியாகும் அமீர் கான் பட ட்ரெய்லர்…

இந்நிலையில் வரும் 29-ம்தேதியன்று ஞாயிற்றுக் கிழமை படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - தனுஷ் எங்கள் மகன் என்பதில் பின்வாங்கப் போவதில்லை - மேலூர் கதிரேசன் தம்பதி

இதையொட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா நடைபெறுகிறது.



இந்த விழாவில், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரவுத்தலா, ராய் லட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் பாடல்களைப் பார்க்க...





இவர்களில் சிலர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகைகள் என்பதால், கோலிவுட்டின் பார்வை தற்போது தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா பக்கம் திரும்பியுள்ளது.

பான் இந்தியா படமாக தி லெஜண்ட் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Legend Saravanan

அடுத்த செய்தி