கேக் வெட்டி அஜித் பாடலை கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ

இந்திய ராணுவத்தினர் ‘அடிச்சுத் தூக்கு’ பாடலை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதற்கு பாடலாசிரியர் விவேகா நன்றி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 11, 2018, 12:47 PM IST
கேக் வெட்டி அஜித் பாடலை கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ
விஸ்வாசம் - அஜித்
Web Desk | news18
Updated: December 11, 2018, 12:47 PM IST
இந்திய ராணுவத்தினர் ‘அடிச்சுத் தூக்கு’ பாடலை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதற்கு பாடலாசிரியர் விவேகா நன்றி தெரிவித்துள்ளார்.

4-வது முறையாக நடிகர் அஜித் - சிவா கூட்டணியில் உர்வாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.


இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அடிச்சுத் தூக்கு என்று தொடங்கும் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெளியான 15 மணி நேரத்தில் 4 லட்சத்து 76 ஆயிரம் லைக்குகளை பெற்றிருக்கும் இந்தப் பாடலை 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கின்றனர். அதேபோல் இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.இந்த நிலையில் பாடல் வெளியான நேரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் பாடலை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த வீடியோவைப் பார்த்த பாடலாசிரியர் விவேகா பெருமிதம் கொண்டுள்ளார். இந்தப் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் விவேகாவுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: December 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...