Home /News /entertainment /

‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் பட நடிகர்களுடன் தனுஷ்… வைரலாகும் புதிய ஃபோட்டோ

‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் பட நடிகர்களுடன் தனுஷ்… வைரலாகும் புதிய ஃபோட்டோ

தி க்ரே மேன் பட நடிகர்களுடன் தனுஷ்

தி க்ரே மேன் பட நடிகர்களுடன் தனுஷ்

The Gray Man : தி க்ரே மேன் திரைப்படம் மார்க் க்ரீனி எழுதியுள்ள நாவலை அடிப்படையாக கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளது.

    தனுஷ் இடம்பெற்றுள்ள தி க்ரே மேன் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் உள்ள நடிகர்களுடன் தனுஷ் இடம்பெறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பாலிவுட்டிலும் ஷமிதாப், ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களில் நடித்து இந்தி வட்டாரத்திலும் தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட பாய்ச்சலாக, ஹாலிவுட்டிலும் கலக்கத் தொடங்கியுள்ளார் தனுஷ்.

    ரூசோபிரதர்ஸ் தயாரித்து இயக்கியுள்ள தி க்ரே மேன் படத்தில் தனுஷுக்கு முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

    பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த நடிகர் விக்ரம் - ஜி.வி.பிரகாஷ், கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி.. சுவாரஸ்யங்கள்

    தி க்ரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்திற்கான புரொமோஷன் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கினர்.

    Vikram 61 : பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!

    இந்நிலையில் தி க்ரே மேன் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாப்பாத்திரங்களை உள்ளடக்கிய ஃபோட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    தி க்ரே மேன் திரைப்படம் மார்க் க்ரீனி எழுதியுள்ள நாவலை அடிப்படையாக கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளது. தி க்ரே மேன் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அசத்தலான கெட்அப்பில் தனுஷ் காணப்படுகிறார். இது அவருடைய வாத்தி படத்தின் லுக் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் அடுத்த மாதம் 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. வாத்தி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி