Home /News /entertainment /

Indian 2: ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கும் அவரது 3 சிஷ்யர்கள்!

Indian 2: ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கும் அவரது 3 சிஷ்யர்கள்!

கமல் ஹாசன் - ஷங்கர்

கமல் ஹாசன் - ஷங்கர்

இந்தியன்-2 திரைப்படத்தை ஷங்கருடன் இணைந்து மூன்று இயக்குனர்கள் இயக்குகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் உள்ளிட்ட நான்கு இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படபிடிப்பு தொடங்காமல் இருந்தது.

இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியன்-2 படப்பிடிப்பை கடந்த மாத இறுதியில் தொடங்கினர். மேலும் ஷங்கர் தன்னுடைய இந்தியன்-2 மற்றும் ராம்சரணை (RC15) வைத்து இயக்கும் புதிய திரைப்படம் என இரண்டு படத்திற்கான படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெறும் என கூறியிருந்தார்.

இதற்கிடையே இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கருடன் இணைந்து மேலும் மூன்று இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதிலும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, இயக்குனர்களாக மாறிய வசந்த பாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் இந்தியன்-2 படத்தில் இணைகின்றனர். அந்தப் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசன் காட்சியை இயக்குநர் ஷங்கர் படமாக்குகிறார்.

கவனம் பெறும் பொன்னியின் செல்வன் பட்டு புடவைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றவர்களின் காட்சிகளை வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தனித்தனியாக தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளை படமாக்கவுள்ளனர். அவர்களுக்கு இயக்குநர் ஷங்கர் தனக்கு வேண்டியவற்றை விளக்கியுள்ளார் என கூறப்படுகிறது.
Published by:Shalini C
First published:

Tags: Director Shankar, Indian 2, Kamal Haasan, Vasantha balan

அடுத்த செய்தி