Home /News /entertainment /

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்… கமல் உறுதி

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்… கமல் உறுதி

விக்ரம் பட ப்ரஸ் மீட்டில் கமல்

விக்ரம் பட ப்ரஸ் மீட்டில் கமல்

விக்ரம் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாகும் என்று கூறிய கமல், அதனையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று தெரிவித்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும், இந்தப் படம் கைவிடப்படவில்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர், கிளிம்ஸ், ட்ரெய்லர், 2 லிரிக்கல் வீடியோ பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஆன்லைனில் விக்ரம் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த படத்திற்கு டிக்கெட்டை புக் செய்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற பகுதிகளில் புக்கிங் தொடங்கிவிட்டதாக தெரியவருகிறது.

இதையும் படிங்க - விஜய்யின் ‘தளபதி 66’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு… வைரலாகும் போஸ்டர்

புரொமோஷன் பணிகளில் ஒன்றாக கமலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியன் 2 படம் கைவிடப்பட்டு விட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கமல், அப்படியான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்தார்.

இந்தியன் 2 படத்தின் இயக்குனரான ஷங்கர் தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்.சி.15 படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். இந்த படத்தை முடித்துக் கொண்டு இந்தியன் 2 படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இயக்குனர் பாலா குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டிய சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து பேசிய கமல், 4 ஆண்டுகளுக்கு பின்னர் படத்தை அளிப்பதற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். விக்ரம் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாகும் என்று கூறிய கமல், அதனையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று தெரிவித்தார்.

விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிடோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். இவரது கேரக்டர் குறித்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Director Shankar, Kamal Haasan

அடுத்த செய்தி