Home /News /entertainment /

Indian 2 : பல தடைகளுக்கு பின்பு தொடங்கிய ’இந்தியன் 2’ படத்தின் சூட்டிங்!

Indian 2 : பல தடைகளுக்கு பின்பு தொடங்கிய ’இந்தியன் 2’ படத்தின் சூட்டிங்!

இந்தியன் 2

இந்தியன் 2

Indian 2 shooting : இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் இந்தியன் 2. ஆனால் 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு சுபாஸ்கரன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என்று சொல்லப்பட்டது.

1996-ல் வடஇந்தியாவை கலக்கிய கமல் - ஷங்கர் காம்பினேஷன்!

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? அந்தப் படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் கமல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் உதயநிதி ஸ்டாலின் முயற்சியில் பிரச்னை முடிவுக்கு வந்தது. மேலும் இந்தியன் 2 பட தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்தது. இதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பை ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குவது என முடிவெடுத்தனர்.

ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ஷாருக்கான் - தீபிகா படுகோன்!



அதன்படி புதிய போஸ்டரை He Is Back என்ற வாசகத்துடன்  வெளியிட்டுள்ளனர். அத்துடன் படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கயுள்ளது. அதில் காஜல் அகர்வால் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Director Shankar, Indian 2, Kamal Haasan, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி