இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து : லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து : லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • Share this:
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் உதவியாளர் சந்திரன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேதம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...?விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் லைகா நிறுவனம் மீது கவனக்குறைவு, விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்