'நான் சொல்லியும் கேட்கவில்லை...' இந்தியன்2 விபத்து குறித்து கிரேன் ஆபரேட்டர் பரபரப்பு வாக்குமூலம்

'நான் சொல்லியும் கேட்கவில்லை...' இந்தியன்2 விபத்து குறித்து கிரேன் ஆபரேட்டர் பரபரப்பு வாக்குமூலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து
  • News18 Tamil
  • Last Updated: February 22, 2020, 12:22 PM IST
  • Share this:
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்துக்கு காரணமானதாக கூறப்படும், கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக, கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஈவிபி பிலிம் சிட்டியில், புதன்கிழமை இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இயந்திரம் சரிந்து, உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இயந்திர ஆபரேட்டர் ராஜன் கவனக்குறைவாக இருந்ததே விபத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்படுகிறது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். எனினும், படத்தின் ஒளிப் பணியாளர்கள் சுமையேற்ற வேண்டாம் என நான் சொல்லியும் கேட்கவில்லை என கிரேன் ஆபரேட்டர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த படத்தின் நாயகன் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஈவிபியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 100 அடி உயர இயந்திரம் பயன்படுத்தப்பட்டதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது. ஃபெப்சி அமைப்பில் அங்கமாக உள்ள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், அதிகபட்சமாக 60 அடி உயர இயந்திரத்தில் மட்டுமே பணியாற்ற பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.


பொதுவாக இவ்வளவு உயரமான இயந்திரத்தை பயன்படுத்தும்போது, அதைத் தாங்கும் அளவிற்கு தரைத்தளம் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், ஈவிபியில் தரைத்தளம் அதற்கேற்ப உறுதியாக அமைக்கப்படவில்லை என்று ஃபெப்சி அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.பாலிவுட்டில் தயாரிக்கப்படும் படங்களில் அதிகபட்சமாக 35 அடி உயர கிரேன் மட்டுமே பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் காப்பீடு செய்யப்படுகின்றன. இதனால், விபத்து ஏற்படும்பட்சத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் நிவாரணத் தொகை வழங்குகின்றன. ஆனால், தமிழ்த் திரையுலகில் சில படங்களுக்கு மட்டுமே காப்பீடு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஈவிபியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு, தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

ஒருவேளை தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், தீயணைப்புத்துறை வீரர்கள், பாதுகாப்பு அம்சங்களை மேற்பார்வையிட்டு அதில் குறைபாடு இருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முன்பெல்லாம் தயாரிப்பாளர்களே ஸ்டுடியோ வைத்திருந்தனர். அதனால் அவர்களே பொறுப்பு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இது போன்ற ஸ்டூடியோக்களில் எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் ஈவிபியில் இறந்த சடலங்களை எடுத்து செல்லக்கூட வாகனங்கள் இல்லை என்றும் கூறினார். இனி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஃபெப்சி உடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு என முடிவெடுத்துள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடந்தது கிரேன் என்ற பாரந்தூக்கி என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், அது கிரேன் அல்ல பூம்லிப்ட் எனப்படும் ஒரு வகை நகரும் இயந்திரம் என்று அதன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த Boom-lift என்பது உயரமான கட்டடங்களுக்கு வெளிப்புறம் இருந்தவாறு சிலவேலைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இதன் கூடையில் 500 கிலோவுக்கு மேல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதனுடைய இயக்கம் கூடையிலே இருக்கும்.

அதாவது இரண்டு ஆள் கொஞ்சம் வேலைக்கு வேண்டிய பொருள்கள் தவிர மேலே அதிகமாக பாரம் ஏற்றக்கூடாது. மேலே உள்ள ஆள் முழு உடல்பாதுகாப்புடன் பாதுகாப்புப் பட்டையை அணிந்து நங்கூரமிட்டிருக்க வேண்டும்.

தலைக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். செல்ல வேண்டிய உயரத்திற்குச் சென்றதும் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி Safe mode-இல் பூம்லிஃப்டை இயங்க வைக்க வேண்டும்.

குறிப்பாக சரியான அளவில் வண்டியை நிறுத்தி சமதளத்தில் Parking செய்த பிறகே உயரத்திற்குச் செல்ல வேண்டும்.

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில், ஒரு பெரிய விளக்குத் தொகுதியை அந்த கூடையில் பொருத்தியதால், கூடையின் தாங்கும் திறனை விட விளக்குத் தொகுதியின் எடை அதிகம். இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடர் விபத்துகள் நடைபெறுவதால், அது ஃபிலிம் சிட்டி இயங்குவதற்கு சரியான இடம்தானா? அந்த இடத்தில் முறையாக அனுமதி பெற்றுத்தான் ஈவிபி நிர்வாகம் பிலிம் சிட்டி அமைத்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கிறது.

Also see:
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading