இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமின் - விசாரணை அதிகாரியாக நாகஜோதி நியமனம்!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமின் - விசாரணை அதிகாரியாக நாகஜோதி நியமனம்!
இந்தியன் 2
  • Share this:
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான விவகாரத்தில் கிரேன் ஆபரேட்டருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இயக்குநர் சங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டரை கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.


மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன், சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யவும் போலீசார் முடிவெடுத்தனர்.

இதனிடையே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான கிரேன் ஆபரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: நடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்