இந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்!

இந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்!
இந்தியன் 2
  • Share this:
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் லைகா நிறுவனம் கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர் மற்றும்  தயாரிப்பு மேனேஜர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு  செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் கவனக்குறைவாலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாததால் நடந்ததாக அப்படத்தின் இணை இயக்குனர் பரத்குமார் கொடுத்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டனர்.


இதனால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்த 6 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அரங்கு அமைத்த மேலாளர் கிரேன் ஊழியர்கள் என 6 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன் பின்னர் நடிகர் கமல் , இயக்குநர் சங்கர் உள்ளிட்ட இந்தியன் 2 பட குழுவினரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்புவின் மாநாடு படத் தயாரிப்பாளர் செய்த புதுமுயற்சி- குவியும் பாராட்டு
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்