புத்தாண்டை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் நியூ லுக் ரிலீஸ்

புத்தாண்டை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் நியூ லுக் ரிலீஸ்
இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் இயக்குநர் சங்கர் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.

இதில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரின் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.


ராஜமுந்திரி சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு தற்போது சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவர் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என தெரிகிறது.

இதனிடையே கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் சங்கர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் ரசிகர்களுக்கான வாழ்த்துச் செய்தியையும் இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் படிக்க: தர்பார் விமானம் தயார்... கபாலி பட பாணியில் விளம்பரத்தைக் கையிலெடுத்த லைகா!
First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்