ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியன் 2 கமல் ஹாசனின் சேனாபதி லுக் இணையத்தில் லீக்

இந்தியன் 2 கமல் ஹாசனின் சேனாபதி லுக் இணையத்தில் லீக்

இந்தியன் 2

இந்தியன் 2

'விக்ரம்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தனது கரியரை இன்னும் பலப்படுத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் ஹாசனின் சேனாபதி லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் ஆயிரக்கணக்கானோருக்குப் பிடித்தமான கதாபாத்திரம். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கமல்ஹாசன் பல தோற்றங்களில் காணப்பட்டாலும், அவரின் சேனாபதி தோற்றம் இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் நிலையில், சில நாட்களில் அடுத்த ஷெட்யூலுக்கு செல்லவுள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், 2023-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

'விக்ரம்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தனது கரியரை இன்னும் பலப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்து மணிரத்னம் மற்றும் ஹெச்.வினோத் படங்களில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில், மகேஷ் நாராயணனுடன் கமல்ஹாசன் நடிக்கும் படம் கிரியேட்டிவ் வேறுபாடுகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்படுமா அல்லது நிரந்தரமாகவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan