'இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள்.. இல்லையெனில் வேறு வேலைகளை செய்யவிடுங்கள்' - இயக்குநர் ஷங்கர் காட்டம்..

இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாக தெரிகிறது.

'இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள்.. இல்லையெனில் வேறு வேலைகளை செய்யவிடுங்கள்' - இயக்குநர் ஷங்கர் காட்டம்..
இயக்குநர் ஷங்கர்
  • Share this:
இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குநர் சங்கர்.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லாக்-டவுன் போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாக தெரிகிறது.

ALSO READ |  மறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா? ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..


தற்போது மத்திய அரசு படப்பிடிப்புகளில் தளர்வு அறிவித்திருக்கும் நிலையிலும் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்க தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை. இதனால் கோபமடைந்த ஷங்கர் படப்பிடிப்பை துவங்குங்கள் அல்லது என்னை வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதனை மறுத்துள்ளது.

 தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் 100 பேர் என்ற எண்ணிக்கை இந்தியன் 2 மாதிரியான பிரமாண்ட படங்களுக்கு போதாது எனவும் குறைந்தபட்சம் 500 பேர் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading