Home /News /entertainment /

இந்தியன் 2வில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் குரு சோமசுந்தரம்!

இந்தியன் 2வில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் குரு சோமசுந்தரம்!

இந்தியன் 2

இந்தியன் 2

கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக். பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்திருந்தாலும்,  கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். அவர்  சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

இயக்குனர் ஷங்கர் – தயாரிப்பாளர் தில் ராஜு இடையே கருத்து வேறுபாடு? ராம்சரண் படத்திற்கு சிக்கல்…

முதன்முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிப்பதை குறித்த மகிழ்ச்சியையும் விவேக் வெளிப்படுத்தியிருந்தார். அந்த சமயத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் நடிகர் விவேக் கடந்த ஆண்டு காலமானார்.  இதனால் இந்தியன் 2 திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தியன் 2 அட்டகாச அறிவிப்பை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

மேலும் நடிகர் விவேக்கின் காட்சிகளை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறார்கள் எனவும் கூறப்பட்டது. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரத்தை இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வைக்கின்றனர்.  குறிப்பாக நடிகர் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளார்.

இதனால் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போனது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த்,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vivek, Indian 2, Kamal hassan, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி