இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு

Indian 2 Accident |

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு
Indian 2 Accident |
  • News18
  • Last Updated: February 20, 2020, 9:37 AM IST
  • Share this:
சென்னை அருகே நேற்று நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில், கிரேன் ஆபரேட்டர் மீது மூன்று பிரிவுகளில் நாசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் சண்டை கலைஞர் ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேதம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல்,  அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கிரேன் ஆபரேட்டர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்