#INDvPAK | வாழ்நாள் அனுபவம்! இங்கிலாந்து மைதானத்தில் சிவகார்த்திகேயன் - அனிருத் பெருமிதம்

இந்த போட்டியைக் காண அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

news18
Updated: June 16, 2019, 5:00 PM IST
#INDvPAK | வாழ்நாள் அனுபவம்! இங்கிலாந்து மைதானத்தில் சிவகார்த்திகேயன் - அனிருத் பெருமிதம்
சிவகார்த்திகேயன் - அனிருத்
news18
Updated: June 16, 2019, 5:00 PM IST
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியைக் காண சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய இருவரும் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் துவங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14-ம் தேதி நடைபெறும் நிலையில் 22-வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியைக் காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியைக் காண அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இங்கிலாந்து சென்றுள்ளனர். மேட்ச் தொடங்குவதற்கு முன்பாக பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இருவரும் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்திருக்கும் அனிருத், “வெற்றி நமதே என்றும், இந்த போட்டியைக் காண்பது வாழ்நாள் அனுபவம் என்றும் கூறியுள்ளார்.



வீடியோ பார்க்க: இந்தியா VS பாகிஸ்தான்... வீழாத இந்தியா 50/50

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...