ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் பரிந்துரை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி கேன்சரால் மரணம்

ஆஸ்கர் பரிந்துரை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி கேன்சரால் மரணம்

செல்லோ ஷோ

செல்லோ ஷோ

கடந்த நான்கு மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராகுல் கோலி தற்போது மறைந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவின் சார்பில் ஆஸ்கரில் நுழைந்துள்ள Chhello Show படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ராகுல் கோலி கேன்சரால் மரணமடைந்துள்ளார்.

  பான் நளின் இயக்கிய செலோ ஷோவில் நடித்திருந்த ஆறு குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரான ராகுல் கோலி இப்போது இல்லை. அவர் அந்தப் படத்தில் மனுவாக நடித்தார், படத்தின் முக்கிய கதாபாத்திரமான சமய்யின் நெருங்கிய நண்பரான நடித்திருந்த அவர் தனது 15 வயதில் கேன்சரால் மரணமடைந்துள்ளார்.

  Chhello Show - 95வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. ஆஸ்கார் 2023க்கு செல்வது மட்டுமின்றி, படம் இந்த வெள்ளிக்கிழமை, அக்டோபர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

  கடந்த நான்கு மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராகுல் கோலி தற்போது மறைந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பல சிகிச்சைகளுக்குப் பிறகும் குணமாகாமல் இருந்திருக்கிறார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

  மற்றொரு நடிகையை தனியாக வீட்டுக்கு அழைத்த அர்னாவ்? லீக்கான ஆடியோ

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ”அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை, ராகுல் தனது காலை உணவை சாப்பிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் காய்ச்சல் வந்த பிறகு, மூன்று முறை இரத்த வாந்தி எடுத்தார். அப்போதே என் பிள்ளை என்னை விட்டு விலகுவதாக உணர்ந்தேன். எங்கள் குடும்பம் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது. அக்டோபர் 14-ஆம் தேதி அவரது கடைசி திரைப்படத்தை (செல்லோ ஷோ) நாங்கள் குடும்பத்துடன் ஒன்றாகப் பார்ப்போம்” என்றார் ராகுலின் தந்தை.

  Published by:Shalini C
  First published:

  Tags: Oscar Awards