Home /News /entertainment /

தமிழ் சினிமா பேசிய தேசபக்தி… சூப்பர் ஹிட்டான நாட்டுப்பற்று படங்கள்

தமிழ் சினிமா பேசிய தேசபக்தி… சூப்பர் ஹிட்டான நாட்டுப்பற்று படங்கள்

ஆர்.ஆர்.ஆர்., இந்தியன், துப்பாக்கி பட போஸ்டர்கள்.

ஆர்.ஆர்.ஆர்., இந்தியன், துப்பாக்கி பட போஸ்டர்கள்.

நாட்டுப்பற்று விடுதலை உணர்வு குறித்து பேசும் படங்கள் பல வெளிவந்திருந்தாலும், மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தேசபக்தி பேசிய தமிழ் சினிமாபடங்களின் தொகுப்பை  இந்த பதிவில் பார்க்கலாம்….  இந்தியன்

  ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கமல் 2 வேடங்களில் நடித்து வெளிவந்த படம். இதில் சேனாபதி என்ற விடுதலை போராட்ட வீரர் மற்றும் ஆர்.டி.ஓ.அலுவலக அதிகாரி என 2 கதாப்பாத்திரங்களை ஏற்றிருப்பார் கமல். தேசபக்தியை தூண்டும் வகையிலும், ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும். அதிக முறை பார்த்தாலும் சில படங்கள் நமக்கு சலிக்காது. அந்தப் பிரிவில் இந்தியனுக்கு நிச்சயம் இடம் உண்டு.இப்போது இந்த படத்தின் 2ம் பாகும் உருவாக்கப்பட்டு வருகிறது.  உன்னைப் போல் ஒருவன்

  கமல் – மோகன் லால் என 2 லெஜெண்ட் நடிகர்கள் நடித்து வெளிவந்த படம். கமலுக்கு முன்பு ஏற்காத கேரக்டரில் நடித்திருப்பார்.  சென்னை காவல்துறை ஆணையரான மோகன்லாலுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சென்னையில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். பாடல்கள் ஏதும் இடம்பெறாத 106 நிமிடங்களே ஓடக் கூடிய இந்த திரைப்படம் விறுவிறுப்புடனும், நாட்டுப் பற்றை தூண்டும் வசனங்களுடன், சாமானியன் பார்வையில் உருவாக்கப்பட்டிருக்கும்.  ரோஜா

  மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த படம். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். ஹனிமூனுக்காக காஷ்மீர் செல்லும் ஜோடியில் கதாநாயகன் அரவிந்த்சாமியை தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அவரை விடுவிக்க மனைவி மதுபாலா மத்திய அரசின் உதவியை நாடி மீட்க போராடுவான். நீண்ட மோதல்களுக்கு பின்னர் அரவிந்த்சாமி விடுவிக்கப்படுவார்.  பம்பாய்

  மும்பையில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களை உண்மைச் சம்பவம் மற்றும் கற்பனை கலந்து இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியிருப்பார். இந்தபடத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் நாட்டுப் பற்றையும், மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன.  ஹேராம்

  கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கிய படம். இந்தி நடிகர் ஷாரூக்கான் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்தியாவின் விடுதலைக்கு சற்று முன்பாக தொடங்கி, காந்தி கொல்லப்பட்ட காலம் வரையிலான நிகழ்வுகள் ஹேராமில் தொகுக்கப்பட்டிருக்கும். இந்த படமும் நாட்டுப் பற்று உணர்வுடன், ஒற்றுமையை வலியுறுத்தி தயாரிக்கப்பட்டிருந்தது.  துப்பாக்கி

  இந்தியாவின் பாதுகாப்புக்கு தூண்களாக இருப்பவர்கள் ராணுவ வீரர்கள். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், நாட்டுப்பற்றை தூண்டும் விதமாகவும் துப்பாக்கி படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஜக்திஷ் என்ற கேரக்டரில் விஜய் ராணுவ வீரராக வாழ்ந்திருப்பார். இந்த படத்தை ராணுவ வீரர்களுக்காக அர்பபணிக்கிறோம் என்று படக்குழுவினர் படத்தின் கிரெடிட் கார்டில் தெரிவித்திருப்பார்கள். விஜய்யின் டாப் 5 படங்களில் இதனை சேர்க்கலாம்.  ஆர்.ஆர்.ஆர்.

  சமீப காலங்களில் வெளியான படங்களில் தேச பக்தி உணர்வை தட்டி எழுப்பிய திரைப்படம். இந்தியாவின் விடுதலைக்காக போராடும் 2 கதாநாயகர்கள் செய்யும் சாகசங்கள், வியப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். பிரிட்டிஷார் இந்தியர்கள் எப்படி பயன்படுத்தினர், அவர்களது பலம் பலவீனம், இந்தியாவின் ஒற்றுமை உள்ளிட்டவற்றை நேர்த்தியாக இந்தப் படம் ஆடியன்ஸிடம் சேர்த்திருக்கும்.
  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood

  அடுத்த செய்தி