முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தயாரிப்பாளரான கார் டிரைவர்... நடிகர் மோகன்லால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டின் பின்னணி..!

தயாரிப்பாளரான கார் டிரைவர்... நடிகர் மோகன்லால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டின் பின்னணி..!

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

தயாரிப்பாளர் ஆண்டனி முன்பு மோகன்லாலின் கார் ஓட்டுநராக இருந்தவர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

மலையாள திரைத்துறையின் ஸ்டார் நடிகரான மோகன்லால், சிறைச்சாலை, இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா போன்ற தமிழ் படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். மோகன்லாலின் நெருங்கிய நண்பரான அந்தோணி பெரும்பாவூர் என்பவர் முன்னணி தயாரிப்பாளர் ஆவார்.

இவரது ஆசிரவாத் பிலிம்ஸ் தயாரிப்பில் த்ரிஷ்யம், புலிமுருகன், லூசிஃபர்,மரைக்காயர் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக மோகன்லால் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். இவர்கள் இடையேயான நிதி பரிவர்த்தனை, லாப பகிர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து மோகன்லாலிடம் வருமான வரித்துறை சோதனையின்போது விசாரித்ததாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஆண்டனி முன்பு மோகன்லாலின் கார் ஓட்டுநராக இருந்தவர்.

கார் ஓட்டுநராக இருந்து தயாரிப்பாளராக உருவெடுத்த ஆண்டனியின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மோகன்லாலின் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையின் 4 மணிநேரம் ஆய்வு செய்து விசாரித்துள்ளனர். ஆய்வு தொடர்பான முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

மலையால திரையுலகினர் மீது கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக வருமான வரித்துறை கட்டம் கட்டி சோதனை நடத்தி வருகின்றது. இதற்கு முன்பே நடிகர் பிருத்விராஜ், மம்முட்டி போன்றோர் வீட்டிலும் சில முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

First published:

Tags: Income Tax raid, IT Raid, Mohanlal