Home /News /entertainment /

சூர்யாவுடன் இன்பன் உதயநிதி... கவனம் பெறும் புகைப்படம்!

சூர்யாவுடன் இன்பன் உதயநிதி... கவனம் பெறும் புகைப்படம்!

இன்பன் - சூர்யா

இன்பன் - சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது.

    நடிகர் சூர்யாவுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு பெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

    இதில் உதயநிதி நடிக்கும் ’ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உதய்யின் மனைவி கிருத்திகா உதயநிதி, தமிழ் சினிமாவின் முன்னணி பெண் இயக்குநர். இவர்களுக்கு இன்பன், தன்மயா என ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்நிலையில், நடிகர் சூர்யாவுடன், இன்பா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. நாளை அவரது ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள நிலையில், இருளர் மக்களின் கல்விக்காக ரூ 1 கோடியை முதல்வரிடம் நன்கொடையாக சூர்யா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Suriya

    அடுத்த செய்தி