• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபு சாலமன் படத்தின் நாயகியான கோவை சரளா...!

பிரபு சாலமன் படத்தின் நாயகியான கோவை சரளா...!

கோவை சரளா

கோவை சரளா

இந்தக் கதையும் மைனா, கும்கி போன்று மலைசார்ந்த களத்தில் நடக்கிறது. ஆதிவாசியாக இதில் கோவை சரளா வருவதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபு சாலமனின் புதிய படத்தில் கோவை சரளா கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு பாட்டி கதாபாத்திரம் என கூறப்படுகிறது. 

பிரபு சாலமன் ஆறு படங்களை இயக்கிய பிறகு ஏழாவதாக எடுத்தப் படம் மைனா. பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்பட்டு வந்த பிரபு சாலமனை மைனா தனித்து அடையாளம் காட்டியது. அதில் அவரது கதைக்களம், கதை சொன்ன விதம் என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டு புதியதொரு தளத்தை எட்டியிருந்தது.

அதனைத் தொடர்ந்து எடுத்த கும்கியும் அவருக்கு பெயர் வாங்கித் தந்தது. இந்த இரு படங்களுக்குப் பின் பிரபு சாலமன் இயக்கிய கயல், தொடரி படங்கள் அடிவாங்கின. நமக்கு காடும், காடு சார்ந்த இடங்களும்தான் சரியாக வரும் என காடன் படத்தை எடுத்தார். தமிழ், இந்தியில் வெளியான காடன் முழுமையான தோல்விப் படமானது. இதனையடுத்து கும்கி 2 படத்தை இயக்குவதாக இருந்தார். அதற்குள் புதிய கதையுடன் படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார்.

இந்தக் கதையும் மைனா, கும்கி போன்று மலைசார்ந்த களத்தில் நடக்கிறது. ஆதிவாசியாக இதில் கோவை சரளா வருவதாக கூறப்படுகிறது. அவர் தனது பேத்திக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டு போராடி வெல்வதுதான் கதையாம். கோவை சரளாதான் படம் முழுக்க வருவார் என்கிறது படக்குழு

Also read... விக்ரமாதித்யா யார்? - வெளியாகிறது ராதே ஷ்யாம் டீஸர்...!

ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு நீதி வாங்கித் தரும் கதைதான் சூர்யாவின் ஜெய் பீம் படமும். அதில் அவர் வழக்கறிஞராக வந்து, போராடியும், வாதாடியும் நீதி வாங்கித் தருகிறார். அது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. பிரப சாலமனின் படத்தில் கோவை சரளா என்ற தனி மனுஷி நீதிக்காக போராடுகிறார்

இதற்கு முன் கமலின் அவ்வை சண்முகியில் கோவை சரளா நாயகியாக நடித்திருந்தார். கமலின் ஜோடி. அது காமெடிப் படம் என்றால், பிரபு சாலமனுடையது சீரியஸ் படம். கோவை சரளாவை கதையின் நாயகியாக்கிய பிரபு சாலமனின் துணிச்சலுக்காகவே படம் பேசப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: