• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முடிவுக்கு வந்த ஷங்கர், வடிவேலு பிரச்சனை...!

முடிவுக்கு வந்த ஷங்கர், வடிவேலு பிரச்சனை...!

இயக்குநர் ஷங்கர் மற்றும் வடிவேலு

இயக்குநர் ஷங்கர் மற்றும் வடிவேலு

லைகா தயாரிப்பில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் வடிவேலு நடிக்க மறுத்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வடிவேலின் முதல் நாயகப் படமாகவும், வெற்றிப் படமாகவும் அமைந்தது. அதன் பிறகு அவர் நாயகனாக நடித்த எந்தப் படமும் ஓடாத நிலையில், ஷங்கர், லைகா கூட்டுத் தயாரிப்பில் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சிம்புதேவன் இயக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படப்பிடிப்பில் ஆரம்பம் முதலே பிரச்சனை செய்து வந்த வடிவேலு ஒருகட்டத்தில் படத்திலிருந்து வெளியேறினார். ஒன்று படத்தை முடித்துத் தர வேண்டும், இல்லையேல் இதுவரை செலவழித்த பணத்தை திருப்பித்தர வேண்டும் என ஷங்கர் தரப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் தந்தது. இதனைத் தொடர்ந்து வடிவேலுவை படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் தவிர்த்து வந்தனர். இந்தப் பிரச்சனைக்கு தற்போது தீர்வு எட்டப்பட்டிருக்கிறது

Also read... வெந்து தணிந்தது காடு படத்தின் செண்ட் லுக் வெளியானது...!

வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகத்தினருடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருடங்களாக நீடித்து வந்தப் பிரச்சனைக்கு முற்றும் போடப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் படம் அனேகமாக சுராஜ் வடிவேலுவை வைத்து இயக்கும் படமாக இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: