A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களைப் பார்க்க 18 வயதிற்குட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்று விதி உள்ளது. இதனை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தணிக்கைக்குழு திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு மூன்றுவகையான சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. U சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரும் பார்க்கலாம். U/A சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர்களின் துணிணையுடன் பார்க்கலாம். A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதிற்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதியில்லை. ஆபாசக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பின் அப்படங்களுக்கு A சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே இந்த கட்டுப்பாடு.
தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையிலான திரையரங்குகளே A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு 18 வயதிற்குட்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. ஒருவருக்கு 18 நிரம்பியதா இல்லையா என்பதை தோற்றத்தை வைத்து மட்டுமே கணக்கிட முடியும் என்பது இன்னொரு நடைமுறை சிக்கல். A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு 18 வயதிற்குட்பட்டவர்களை அனுமதிப்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து தணிக்கைக்குழு திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்கவில்லையெனில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!
சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மன்மதலீலை திரைப்படம் வெளியானது. அடல்ட் கன்டென்டில் தயாரான இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் தந்திருந்தது. இந்தப் படத்தை 18 வயதிற்குட்பட்டவர்களும் அதிகளவில் திரையரங்கில் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திரையரங்குகளுக்கு தணிக்கைக்குழு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.